பள்ளிகளில் பாலியல் குற்றங்கள் நடவடிக்கை எடுங்க முதல்வரே!
பள்ளிகளில் பாலியல் குற்றங்கள் நடவடிக்கை எடுங்க முதல்வரே!
ADDED : பிப் 12, 2025 10:31 PM
புதுக்கோட்டை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில், ஆசிரியர்களே அங்குள்ள மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வெளியாகியுள்ள செய்திகள், தமிழகத்தின் கல்வி துறை தரம் தாழ்ந்து, பாதாளத்தை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறது என்பதை உணர்த்துகிறது.
தமிழகத்தில் தினமும் அதிகரித்து வரும் அரசு பள்ளி ஆசிரியர்களின் பாலியல் அத்துமீறல்களால், பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பவே, பெற்றோர்கள் பயந்து தயங்குகின்றனர். பள்ளி முதல் கல்லுாரி வரை தொடரும் இந்த பாலியல் வன்கொடுமைகளால், பெண்களின் கல்வி பெருமளவில் பாதிக்கப்படும் என்பதை, முதல்வர் ஸ்டாலின் உணரவில்லையா? அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களை ஒடுக்க வேண்டிய ஸ்டாலினின் இரும்புக்கரம் எங்கே?
'எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சி' என்று இனியும் உங்களை, நீங்களே ஏமாற்றி கொள்ளாமல், கல்வி நிலையங்களில் தலைவிரித்தாடும் பாலியல் குற்றங்களை ஒடுக்க, கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
வானதி, பா.ஜ., தேசிய மகளிரணி தலைவர்.