ADDED : ஆக 05, 2025 02:49 AM
சென்னை: அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க, வரும் 11, 12ம் தேதிகளில் திருப்பூர், கோவை மாவட்டங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் செல்கிறார்.
கடந்த மாதம் 21ம் தேதி, உடல் நல பாதிப்பால், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் அனுமதிக்கப்பட்டார். அதனால், கடந்த மாதம் 22, 23 ஆகிய தேதிகளில் கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு, அவர் செல்லவிருந்த பயணம் ஒத்தி வைக்கப்பட்டது.
தற்போது, முதல்வர் குணமடைந்து, வழக்கமான பணிகளை பார்க்க துவங்கி விட்டதால், ஒத்தி வைக்கப்பட்ட திருப்பூர், கோவை மாவட்ட நிகழ்ச்சிகளுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
அதில் பங்கேற்க, வரும் 11, 12 ஆகிய தேதிகளில், அம்மாவட்டங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் செல்கிறார்.
திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம், உடுமலைப்பேட்டையில் நடக்கும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். கோவையில், 'மாஸ்டர் பிளான்' தயாரிப்பு தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.