தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ அமைச்சர் இருக்கையில் அமர்ந்த முதல்வர் விஜய்

 அமைச்சர் இருக்கையில் அமர்ந்த முதல்வர் விஜய்

 அமைச்சர் இருக்கையில் அமர்ந்த முதல்வர் விஜய்


ADDED : ஆக 28, 2026 06:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 28, 2026 06:33 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: சட்டசபைக்கு நேற்று மாலை வந்த முதல்வர் விஜய், அமைச்சர் அருண்ராஜ் இருக்கையில், ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக அமர்ந்து, சட்டசபை நடவடிக்கைகளை கவனித்தார்.

நேற்று மாலை 4:40 மணிக்கு, சபைக்கு வந்த முதல்வர் விஜய், தன் இருக்கையில் அமர்ந்தார்.

ஓரிரு நிமிடத்தில் எழுந்து, அமைச்சர் செங்கோட்டையன் அருகே, அமைச்சர் அருண்ராஜ் அமரும் இடத்தில் சென்று அமர்ந்தார். அமைச்சர் செங்கோட்டையனிடம் பேசிய முதல்வர் அங்கேயே அமர்ந்து விட்டார்.

முதல்வர் சபைக்கு வந்ததை அறிந்து, அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ஆனந்த், ரமேஷ், நிர்மல்குமார், கீர்த்தனா, அருண்ராஜ் உள்ளிட்டோர் அடுத்தடுத்து வந்தனர்.

காலியாக இருந்த, த.வெ.க., -- எம்.எல்.ஏ.,க்களின் இருக்கைகளும் நிரம்பின. அமைச்சர் அருண்ராஜ் வந்தபோது, 'அமர்ந்து கொள்கிறீர்களா?' என, முதல்வர் விஜய் கேட்டார்.

அதற்கு அவர், 'நீங்கள் அமருங்கள்' எனக்கூறி விட்டு, அருகில் காலியாக இருந்த இருக்கையில் அமர்ந்தார். அமைச்சர் இருக்கையில் அமர்ந்தபடி, சபை நடவடிக்கைகளை கவனித்த, முதல்வர் விஜய், மாலை 6:17 மணிக்கு, சபையில் இருந்து வெளியேறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us