ADDED : மே 18, 2025 04:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கோபாலசமுத்திரம் அருகே இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்கு வசிக்கும் பிரதீபன் -- மேரி ஸ்டெல்லா தம்பதிக்கு ஒன்றரை வயதில் விபீஷன் என்ற ஆண் குழந்தை இருந்தது.
நேற்று காலை 10:00 மணியளவில் மேரி ஸ்டெல்லாவின் அக்கா வீடு அருகில் துணி துவைப்பதற்காக வாளியில் தண்ணீர் நிரப்பி வைத்திருந்தார். அதில் விளையாடிய விபீஷன் தலைகீழாக வாளிக்குள் மூழ்கியதில் பரிதாபமாக இறந்தார். முன்னீர்பள்ளம் போலீசார் விசாரிக்கின்றனர்.