கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்: முதல்வர் வாழ்த்து; தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்: முதல்வர் வாழ்த்து; தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
ADDED : டிச 25, 2024 06:25 AM

சென்னை: கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு, நள்ளிரவு முதல் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை, திருப்பலி, ஆராதனை நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
கிறிஸ்துமஸ் விழா இன்று (25ம் தேதி) கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகைகையையொட்டி நாடு முழுவதும் கிறிஸ்தவர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையொட்டி, தமிழகத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் நள்ளிரவு, சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் கிறிஸ்தவர்கள் பங்கேற்று, கிறிஸ்துமஸை கொண்டாடினர். கிஸ்துமஸை ஒட்டி, தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
முதல்வர் வாழ்த்து:
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்து செய்தியில், 'இயேசு காட்டிய அன்பின் பாதையை பின்பற்றும் கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள், அனைத்து மதத்தவரும் சம உரிமையோடு வாழும் மாநிலமாக தமிழ்நாடு திகழ தமிழக அரசு பாடுபடும்' என வாழ்த்து தெரிவித்துள்ளார்.