ADDED : டிச 17, 2024 07:34 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருந்துக்கு சென்றால்...
ஒருவருடைய வீட்டிற்கு உணவருந்தச் சென்றார் இயேசு. அப்போது முதல் பந்தியில் இடம்பிடிக்க பலரும் ஓடினர்.
அதைக் கண்டதும் கீழ்க்கண்ட அறிவுரையை அவர்களுக்கு வழங்கினார். விருந்தில் உங்களை விட மதிப்பிற்குரிய ஒருவரை, விருந்து கொடுப்பவர் அழைத்திருக்கலாம். மதிப்பிற்கு உரியவர் வரும்போது 'அவருக்கு இடம்கொடுங்கள்' என உங்களிடம் சொல்லலாம். வேறுவழியின்றி நீங்கள் வெட்கத்தோடு எழுந்திருக்க நேரிடும்.
எனவே எந்த இடம் காலியாக இருக்கிறதோ அங்கு உட்காருங்கள். அப்போது விருந்து கொடுப்பவர், 'நண்பரே. இந்த இடத்தில் அமருங்கள்' என உங்களை பெருமைப்படுத்துவார். தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப் பெறுவர். தம்மைத் தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர்.