ADDED : டிச 18, 2024 06:57 PM

உங்களால் முடியும்
தன் நண்பரான பாதிரியாரை சந்தித்தார் விஞ்ஞானி ஒருவர். அப்போது அவரிடம், ''பரிசுத்த ஆவி என்று ஒருவர் இருப்பதை நான் நம்பவில்லை. காரணம். அவரை ஒருவரும் பார்த்ததில்லை. பிறகு எப்படி நம்புவது?'' என சந்தேகம் கேட்டார்.
அதற்கு பாதிரியார், ''உங்கள் இதயத்துடிப்பை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா'' எனக் கேட்டார். ''இல்லை... நான் பார்த்ததில்லை'' ''சரி. இதயத் துடிப்பை உணர்ந்திருக்கிறீர்களா?'' ''ஆம். நெஞ்சில் கை வைக்கும் போது அது துடிப்பதை உணர்ந்துள்ளேன்'' ''அதுபோலத்தான். ஆண்டவரை நாம் கண்டதில்லை. ஆனால் பிறருக்கு உதவும்போது அவர்களது முகத்தில் தெரியும் புன்னகையில் அவரை பார்க்கிறோம். நல்ல விஷயங்களை பேசும்போது மனதில் அவரை உணர்கிறோம்.
இப்படி நற்பாதையை தேர்ந்தெடுக்கும் நபர்களை அவர் வழிநடத்திச் செல்கிறார். நீங்களோ அறிவியல் கண்டுபிடிப்புகளால் மக்களை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்கிறீர்கள். நீங்களும் அவரை உணரலாம்'' என உற்சாகப்படுத்தினார்.