ADDED : டிச 06, 2024 07:01 PM

பணிவாக இருங்கள்
அமெரிக்க அதிபர்களில் குறிப்பிடத்தக்கவர் ஆபிரகாம் லிங்கன். நேர்மையின் பாதையில்
சென்றதால் உச்சத்திற்கு சென்றவர். இவரது வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியை பார்ப்போம்.
ஹார்வர்டு பல்கலையில் இவரது மகன் ராபர்ட் பட்டம் பெற்றவர். இவரும் தனது தந்தையைப்போல் நாட்டுக்கு சேவை செய்ய விரும்பினார். இதற்காக என்ன செய்யலாம் என
யோசித்தார். அவரது சிந்தனையில் உதித்த முதல் வழி ராணுவம். ஆம். தான் ராணுவத்தில்
பணியாற்ற விரும்பி, தந்தையிடம் தெரிவித்தார்.
அவரோ, 'சரி. முயற்சித்து பார்ப்போம்' என ஒற்றை வார்த்தையில் கூறினார். பின் ராணுவ
தளபதியிடம், 'என் மகன் ராணுவத்தில் சேர்ந்து சேவை செய்ய விரும்புகிறான். அவனுக்கு
ஏற்ற பணி ஏதாவது இருந்தால் கொடுத்து உதவுங்கள். இதை அதிபராக தங்களிடம்
கேட்கவில்லை. ஒரு நண்பனாக நினைத்து கேட்கிறேன்' என பணிவாக கூறினார் லிங்கன்.
பணிவு உங்களை உயர்த்தும்.