ADDED : ஜன 29, 2024 12:01 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சங்கி என்பது கெட்ட வார்த்தை என்று மகள் ஐஸ்வர்யா அப்படி சொல்லவில்லை என நடிகர் ரஜினி கூறினார்.
சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: சங்கி என்பது கெட்ட வார்த்தை என்று ஐஸ்வர்யா அப்படி சொல்லவில்லை. சங்கி என்பது கெட்டவார்த்தை அல்ல.
அப்பா ஆன்மிக வாதி. அனைத்து மதத்தையும் விரும்பும் அவரை ஏன் சங்கி என்று சொல்கிறார்கள் என்பதே ஐஸ்வர்யா பார்வை. அனைத்து மதங்களுக்கும் சொந்தமானவன் நான். லால் சலாம் படம் சூப்பராக வந்துள்ளது. படத்தில் மத நல்லிணக்கம் பற்றி சொல்லி இருக்கிறார்கள். இவ்வாறு ரஜினி கூறினார்.