பழநி பஞ்சாமிர்தம் பற்றி சர்ச்சை; மோகன் ஜி கைது சட்டவிரோதம் எனக்கூறி ஜாமின் வழங்கியது நீதிமன்றம்
பழநி பஞ்சாமிர்தம் பற்றி சர்ச்சை; மோகன் ஜி கைது சட்டவிரோதம் எனக்கூறி ஜாமின் வழங்கியது நீதிமன்றம்
UPDATED : செப் 24, 2024 07:34 PM
ADDED : செப் 24, 2024 12:20 PM

திருச்சி: பழநி பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த சினிமா இயக்குனர் மோகன் கைது செய்யப்பட்டார். அவர் கைதுக்கு முகாந்திரம் இருந்தாலும் கைது செய்யப்பட்டது சட்டவிரோதம் எனக்கூறி திருச்சி நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.
பிரபல சினிமா இயக்குனர் மோகன். பழைய வண்ணாரப்பேட்டை, ருத்ரதாண்டவம், திரவுபதி படங்களை இயக்கியவர். அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசக்கூடியவர்.
இவர் சமீபத்தில், பழநி கோவிலில் வினியோகம் செய்யப்படும் பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மருந்து கலந்து கொடுப்பதாக கூறி இருந்தார். இது பற்றி திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்தனர். சென்னையில் இருந்த அவரை, இன்று காலை கைது செய்தனர்.
அவரை மாலை திருச்சி நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதி, மோகன்ஜி கைதுக்கு முகாந்திரம் உள்ளது. ஆனால், கைது செய்யப்பட்டது சட்டவிரோதம். நேரில் ஆஜராக நோட்டீஸ் அளித்த போலீசார், அவகாசம் அளிக்காமல் கைது செய்தது ஏன் என கேள்வி எழுப்பி அவருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.