ADDED : செப் 16, 2026 03:05 AM
எம்.எஸ்.சுப்புலட்சுமி படத்திற்கு அனிருத் இசை
பாரத ரத்னா விருது பெற்ற கர்நாடக சங்கீத பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை படமாகிறது. அவரது வேடத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்க, கவுதம் தின்னனூரி இயக்குகிறார். எம்.எஸ். சுப்புலட்சுமியின் 110வது பிறந்தநாளான இன்று இப்பட விழாவை நடிகர் கமல் சென்னையில் துவக்கி வைக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். ராப், வெஸ்டன் இசையில் அசத்தும் அனிருத் கர்நாடக இசையை எந்தளவுக்கு வழங்குவார் என பலரும் ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
சமந்தாவிற்கு பாரம்பரிய முறைப்படி வளைகாப்பு
இயக்குனர் ராஜ் நிடிமொருவை கடந்தாண்டு நடிகை சமந்தா திருமணம் செய்தார். தற்போது கர்ப்பமாக உள்ள சமந்தாவிற்கு கோவை ஈஷாவில் வளைகாப்பு நடந்தது. அவர் வெளியிட்ட பதிவில், “நமது மரபுகள் மீது எனக்கு எப்போதும் ஆழ்ந்த மரியாதை உண்டு. ஒவ்வொரு சடங்கிற்குப் பின்னாலும் உள்ளதை நான் முழுமையாக புரிந்து கொள்ளாமல் இருக்கலாம். ஆனால் பழங்கால நடைமுறைகள், தலைமுறை கடந்து கொண்டு செல்லப்படும்போது அதில் ஒரு அழமான அம்சம் உள்ளது என்பதை நான் எப்போதும் நம்புகிறேன்'' என குறிப்பிட்டு வளைகாப்பு வீடியோ, போட்டோக்களை பகிர்ந்துள்ளார்.
சைமாவில் 6 விருதுகளை வென்ற 'டூரிஸ்ட் பேமிலி'
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய திரைப்படங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 'சைமா' எனும் 'தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள்' வழங்கப்படுகின்றன. இந்தாண்டுக்கான 14வது சைமா விருதுகள் பெங்களூரில் நடந்தது. இதில் தமிழ் பிரிவில் 'டூரிஸ்ட் பேமிலி' படம் அதிகபட்சமாக 6 விருதுகளை வென்றது. சிறந்த நடிகராக 'பைசன்' படத்திற்காக துருவ் விக்ரம் பெற்றார். சிறந்த படத்திற்கான விருதை 'டிராகன்' வென்றது.
பல காலக்கட்டங்களை கொண்ட 'வாரணாசி'
ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ்பாபு, பிரியங்கா சோப்ரா, பிரித்விராஜ் நடிக்கும் படம் 'வாரணாசி'. பிரித்விராஜ் பேசுகையில், ''இது வெறும் டைம் டிராவல் பற்றிய படம் மட்டுமல்ல, அதைத் தாண்டிய பல காலக்கட்டங்கள் இடம் பெற்றுள்ளன. படப்பிடிப்பு தளத்தில் இருந்து ராஜமவுலி போன்ற வித்தியாசமான இயக்குனர் இவ்வளவு பிரமாண்டமான முயற்சியை மேற்கொள்வதைக் காண்பது வியப்பளிக்கிறது'' என்றார். இப்படம் அடுத்தாண்டு ஏப்.,7ல் ரிலீசாகிறது.
