sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சினிமா என்றொரு கனவுத் தொழிற்சாலை

/

சினிமா என்றொரு கனவுத் தொழிற்சாலை

சினிமா என்றொரு கனவுத் தொழிற்சாலை

சினிமா என்றொரு கனவுத் தொழிற்சாலை


ADDED : ஆக 18, 2011 06:15 PM

Google News

ADDED : ஆக 18, 2011 06:15 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற



சினிமா...

என்ற ஒரு சொல் எப்போதுமே வசீகரமாய்த்தான் இருந்திருக்கிறது. பேசாத படங்கள் துவங்கிய காலம் முதல் அசுர வளர்ச்சி அடைந்துள்ள இன்றைய காலகட்டம் வரை சினிமா எப்போதுமே ஒரு ஈர்ப்புத் தன்மையை தன்னுள்ளே கொண்டுள்ளது.

அதனால்தான், தங்களது குடும்பத்துக்கே ஜீவனாய் இருக்கும் விவசாய நிலங்களைக் கூட விற்று பணத்தை எடுத்துக் கொண்டு படம் எடுக்கிறேன் பேர்வழி என்று இந்த கனவுலகத்தை நோக்கிப் புறப்படுகின்றனர். அப்படிப் பணம் இல்லாதவர்கள் சினிமாவில் சின்ன வேடத்திலாவது முகம் காட்டிவிட வேண்டும் என்ற கனவுடன் இந்தப் பட்டினத்தை நோக்கி ரயிலேறி விடுகின்றனர்.

ஆனால், எது எப்படியோ சினிமா ஒரு கலை என்பதையும் தாண்டி ஒரு தொழிலாக லட்சக்கணக்கான குடும்பங்களை வாழவைத்துக் கொண்டிருக்கிறது என்பதை மறுக்க முடியாது. இத்தகைய சினிமாவுடைய வரலாறும் சுவாரஸ்யமானதுதான்.

1897 ல், மதராசின் விக்டோரியா பப்ளிக் ஹாலில் ஒரு ஐரோப்பியரால் சில படங்கள் போட்டுக் காண்பிக்கப்பட்டதுதான் இங்கு சினிமாவுக்கான முதல் வித்தாக இருந்தது. பின்னர் துவங்கப்பட்ட “எலக்ட்ரிக் தியேட்டர்’ (இப்போது தபால் அலுவலகம் உள்ள இடம்) சில பேசாத படங்களைக் காண்பிக்க ஆரம்பித்தது. அன்றைய பிரிட்டிஷாருக்கு இது மிகப் பெரிய பொழுதுபோக்காய் இருந்தது.

மேற்கத்திய பாணியில் நாடகம், கலை விழாக்கள் மற்றும் படங்கள் போட்டுக் காண்பிப்பதற்காக மவுன்ட் ரோட்டில் “லிரிக் தியேட்டர்’ கட்டப்பட்டது. ஐரேப்பியர்கள் இங்கே விருந்துகளுக்காகக் கூடுவதும், தமது நடன நிகழ்ச்சிகளை நடத்துவதுமாக இதை ஒரு கேளிக்கை இடமாகவே பயன்படுத்தினர். கோஹன் என்பவரால் நிறுவப்பட்ட இங்கு அவ்வப்போது ஊமைப்படங்களும் காண்பிக்கப்பட்டன.

அப்போது, “சௌத் இண்டியன் ரெயில்வேஸ்’ கம்பெனியில் பணியாற்றிய சாமிக்கண்ணு வின்சென்ட் முதன் முதலில் புரொஜெக்டரை வாங்கி, அவரே இயக்கி, படங்கள் காட்டி வந்தார்.

மதராசப்பட்டினத்தில், 1912ல் முதல் தியேட்டரான “கெயிட்டி தியேட்டர்’ வெங்கய்யா என்பவரால் கட்டப்பட்டது. 1916 ல் நடராஜ முதலியாரால் என்பவரால் எடுக்கப்பட்ட “கீசக வதம்’என்ற ஊமைப்படம்தான் இங்கு எடுக்கப்பட்ட முதல் படம்.

வெங்கய்யா மற்றும் அவரது மகன் பிரகாஷ் “மீனாட்சி கல்யாணம்’ என்ற படத்தை எடுத்தனர். அப்போது இந்தியப் பெண்கள் சினிமாவில் நடிக்க விரும்பாத காரணத்தால், ஆங்கிலோ இந்தியப் பெண்களை வைத்துதான் படம் எடுக்க வேண்டி இருந்தது. அப்போதைய படங்கள் ஊமைப்படங்களாக இருந்ததால் அப்பெண்களுக்கு மொழி ஒரு பிரச்னையாக இருக்கவில்லை.

பத்மனாபன் என்பவர் சைதாப்பேட்டையில் கட்டிய ஸ்டுடியோவில் ராஜா சாண்டோ இயக்கத்தில் தயாரிக்கப்பட்ட “அனாதைப் பெண்’ போற்றப்பட்ட படமாக அமைந்தது.

தமிழின் முதல் பேசும் படமான “காளிதாஸ்’1931 ல் பம்பாயில் தயாரிக்கப்பட்டது. தமிழ், தெலுங்கு, இந்தி கலந்து பேசப்பட்ட இந்தப் படத்தின் வெற்றிதான் மற்ற பேசும் படங்களுக்கு உந்துதலாக இருந்தது. 1933 ல் கோலாப்பூரில் தயாரிக்கப்பட்ட “சீதா கல்யாணம்’ என்ற படத்தில் ராஜம் என்ற வழக்கறிஞர் ராமராக நடிக்க, அவரது தங்கையே சீதையாக நடித்தார். அவரது 6 வயது மகனும் அப்படத்தில் நடித்தான். அச்சிறுவன்தான் பின்னாளில் வீணை வித்துவானாகவும் இயக்குனருமாக அறியப்பட்ட வீணை பாலசந்தர்.

1935 ல் வந்த முக்கிய படங்களில் ஒன்றான “நந்தனார்’ படத்தில் கே.பி.சுந்ராம்பாள் ஆண் வேடத்தில் நடித்திருந்தார். (இவர்தான் முதன்முதலில் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் பெற்ற நடிகை என்று போற்றப்படுபவர்)

1934 ல் தன் மாயக் குரலால் ரசிகர்களை மயக்குவித்த தியாகராஜ பாகவதர் ஒரு பெரும் புரட்சியே நடத்திவிட்டார். பவளக் கொடியுடன் ஆரம்பித்த அவரது புகழ் சிந்தாமணி, சிவகவி, அம்பிகாபதி, திருநீலகண்டர் போன்ற படங்களின் மூலம் புகழின் உச்சியை அடைந்தது. இப்படங்களின் மூலம் பாபநாசம் சிவன் இசையமைப்பாளராகவும், இளங்கோவன் சிறந்த வசனகர்த்தாவாகவும் அறியப்பட்டனர்.

பாகவரது “ஹரிதாஸ்’ படம் மதராசப்பட்டினத்துத் திரையரங்கில் 100 வாரங்களுக்கு மேல் ஓடி, மூன்று தீபாவளிகளைக் கண்டு சாதனை படைத்தது.

சுப்பிரமணியத்தின் “சேவாதனம்’ படம் மூலம் பிரபல கர்னாடக இசைப் பாடகி சுப்புலக்ஷ்மியின் குரல்வளம் எல்லோராலும் அறியப்பட்டது. இதன் விளைவுதான் அவர் பின்னாளில் மீராவாக அர்ப்பணித்துக் கொண்டது.

அப்போது நாடகக் கலையும் சிறந்து இருந்ததால் நாடகக் கலைஞர்கள் சினிமாவை நோக்கிக் காலடி எடுத்து வைத்தனர். அவர்களது செழிப்பான குரல் வளம், நடிப்புத்திறன் முதலானவை சினிமாவின் அணுகுமுறையால் மெருகேற்றப்பட்டு, வெளிக்கொணரப்பட்டன.

சமூக சீர்திருத்தம் அப்போது ஒரு முக்கிய அம்சமாக எடுத்துக் கொள்ளப்பட்டது. அத்துடன் விடுதலைப் போராட்டமும் சேர்ந்து கொண்டதன் விளைவால் சில சிறந்த படங்கள் வெளிவந்தன. அவ்வாறு வந்த படங்களில் “டம்பாச்சாரி’, “மேனகா’போன்ற படங்கள் வெகுவாக ரசிக்கப்பட்டன. “மேனகா’ படத்தில்தான் முதன்முறையாக பாரதியின் பாடல் பாடப்பட்டது. 1936 ல் எம்.ஜி.ராமச்சந்திரன் நடத்து வெளிவந்த “சதி லீலாவதி’ படத்தில் இலங்கையில் தொழிலாளர்களின் நிலை பேசப்பட்டது.

இவ்வகையில், என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம் தம்பதிகள் தமிழ் சினிமாவுக்கு பெரும் சேவை செய்துள்ளனர். பின்னர் வந்த நடிகர்களில் பி.யூ.சின்னப்பா முதலிடம் வகித்தார்.

இந்தியாவின் சிறந்த ஸ்டியோக்களில் முதன்மை வகித்த ஜெமினி வெளிநாட்டு ஸ்டியோக்களுக்கு இணையாக சிறந்து விளங்கியது. இதன் அதிபர் வாசனது படங்கள் தமிழ்நாட்டை உலகளவுக்கு உயர்த்தின. விடுதலைக்குப் பின்னர் தமிழ் சினிமா மிகச் சிறந்த வளர்ச்சியை அடைந்தது.










      Dinamalar
      Follow us