ADDED : மே 11, 2025 01:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:திரைப்பட தொழிலாளர்கள் வரும் 14ம் தேதி, ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்ய உள்ளனர்.
'பெப்சி' தலைவர் செல்வமணி உள்ளிட்ட நிர்வாகிகள் வெளியிட்டுள்ள அறிக்கை:
திரைப்பட துறையை சேர்ந்த, 23 சங்கங்களை உள்ளடக்கிய தொழிலாளர்கள் கூட்டமைப்பான, 'பெப்சி' அமைப்பில், 25,000க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர்.
இந்நிலையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை சேர்ந்த சில நிர்வாகிகள், புதிதாக தமிழ் திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்பு என்ற, ஒன்றை உருவாக்க முயற்சிக்கின்றனர்.
இதற்காக, முதல்வர் தலைமையில் புதிய அமைப்புக்கான துவக்க விழா நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதை கண்டித்து, வரும் 14ம் தேதி, ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தமும், கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்த முடிவு செய்துஉள்ளோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.