தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ சினிமா

 சினிமா

 சினிமா


ADDED : செப் 01, 2026 04:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 01, 2026 04:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தயாரிப்பாளர் ஆனார் நித்யா மேனன்

நடிகைகள் நயன்தாரா, சார்மி வரிசையில் நித்யா மேனன் தயாரிப்பாளராகி உள்ளார். கேயுரி புரொடக் ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் அவர் தயாரிக்கும் படத்தில் அவரே நாயகியாக நடிக்கிறார். பேண்டஸி டார்க் காமெடி ஜானரில் உருவாகும் இந்த படத்தை டிகே இயக்குகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் உருவாகிறது. படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.

இந்த வார ரிலீஸ் படங்கள் என்னென்ன

செப்., மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையான 4ம் தேதி பெரிய படங்கள் வெளியாகவில்லை. ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்த 'இம்மார்டல்', புகழ் நடித்த '4 இடியட்ஸ்', மற்றும் 'ஆக்குவாய் காப்பாய், நாகரீக பயணம்' ஆகிய தமிழ் படங்கள் ரிலீஸாகின்றன. இவற்றுடன் நிவின் பாலி, மமிதா பைஜூ நடித்த மலையாள படமான 'பெத்லகேம் குடும்ப யூனிட்' தமிழில் டப்பிங் ஆகி ரிலீஸாகிறது.

14 கிலோ எடையை கூட்டி குறைத்த நிமிஷா சஜயன்

நடிகை நிமிஷா சஜயன் முதன்முறையாக பபிதா சிங் ரிப்போர்ட்டிங் படம் மூலமாக பாலிவுட்டிலும் நுழைகிறார். போலீஸ் வேடத்தில் நடிக்கும் அவர் இதற்காக தனது உடல் எடையை 58 கிலோவிலிருந்து 72 கிலோ வரை கூட்டியிருந்தார். படம் முடிந்த பிறகு தன் எடையை பழைய நிலைக்கு கொண்டு வர கடும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டதாகவும், அது உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சவாலாக இருந்தது என்றும் நிமிஷா கூறினார்.

'எனது பல படங்களுக்கு தேசிய விருது கிடைக்கவில்லை'

ஜி.வி.பிரகாஷ், கயாடு லோஹர் நடித்த இம்மார்டல் செப்., 4ல் ரிலீஸாகிறது. ஜி.வி.பிரகாஷ் அளித்த பேட்டி: ''இம்மார்டல் என்றால் சாகாவரம் பெற்றவர்கள் என அர்த்தம். ஒரு சர்வைவல் திரில்லராக இருக்கும். விரைவில் அமரன் படத்திற்காக தேசிய விருது வாங்க உள்ளேன். எங்கள் குடும்பத்துக்கு 10வது விருது. எனக்கு தேசிய விருது அறிவித்ததில் சர்ச்சை வரவில்லை. அதேசமயம் நான் இசையமைத்த 'வெயில், ஆயிரத்தில் ஒருவன், தெய்வத்திருமகள், மதராசபட்டினம்' போன்ற படங்களுக்கு தேசிய விருது கிடைக்கவில்லை,'' என்றார் .

எம்.எஸ்.சுப்புலட்சுமியாக ராஷ்மிகா

பாரத ரத்னா விருது பெற்ற மறைந்த கர்நாடக இசை பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கையை இயக்குனர் கவுதம் தின்னனுாரி படமாக்க உள்ளார். அவரது வேடத்தில் நடிக்க சாய் பல்லவி, ருக்மணி வசந்த் ஆகியோரிடம் பேசினர். சில காரணங்களால் அவர்கள் நடிக்கவில்லை. இப்போது ராஷ்மிகா நடிக்க உள்ளாராம். செப்.16ல் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பிறந்தநாள் வருகிறது. அன்றைய தினம் அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.

போட்டியில் அனிருத் சாய் அபயங்கர்

இன்றைய 'ஜென் ஸி' ரசிகர்கள் கொண்டாடும் இசையமைப்பாளர்களாக அனிருத், சாய் அபயங்கர் உள்ளனர். ரஜினியின் 'ஜெயிலர் 2' படத்திலிருந்து அனிருத் இசையமைத்த 'அல்ல பொலேலோ' பாடல் 10 நாட்களுக்கு முன் வெளியாகி, யுடியூப்பில் 15 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை கடந்தது. சாய் அபயங்கர் இசையில் கடந்தவாரம் 'ரதிமா' என்ற தனியிசை ஆல்பம் வெளியானது. இது யுடியூப்பில் 16 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. ரஜினி, அனிருத் கூட்டணியை தாண்டி சாய் அபயங்கரின் தனி ஆல்பம் முன்னணியில் இருப்பது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

'தகப்பன்' படப்பிடிப்பு நிறைவு டிசம்பரில் ரிலீஸ்

ஜீவா நடிப்பில் அடுத்து 'ஜாலியா இருந்த ஒருத்தன்' படம் ரிலீஸாக உள்ளது. இதையடுத்து ரா.வெங்கட் இயக்கத்தில் 'தகப்பன்' படத்தில் நடித்து வந்தார். நாயகியாக ரஜிஷா விஜயன் நடித்துள்ளார். அப்பா, மகன் பாசத்தை வைத்து மதுரையை மையமாக கொண்ட கதைக்களத்தில் உருவாகி வந்த இதன் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. டிசம்பரில் படம் ரிலீஸாகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us