ADDED : ஜன 08, 2024 12:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி : காரைக்குடி வள்ளலார் தெரு சேவகப்பெருமாள் 45.
நகராட்சி துாய்மை பணியாளராக இருந்தார். நேற்று காலை தனது வீட்டிற்கு அருகே உள்ள ரவி என்பவரது வீட்டில் சாக்கடை கால்வாய் அடைப்பை சரி செய்துள்ளார். அப்போது அங்கிருந்த 'செப்டிக் டேங்க்' மூடியை திறந்து சரி செய்ய முயற்சித்தார். அங்கிருந்து வெளியேறிய விஷவாயு தாக்கி, தொட்டிக்குள் விழுந்து உயிரிழந்தார். காரைக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.