மணலியில் மிக மிக பலத்த மழைக்கு மேக வெடிப்பே காரணம்: சென்னை வானிலை மையம் அறிவிப்பு
மணலியில் மிக மிக பலத்த மழைக்கு மேக வெடிப்பே காரணம்: சென்னை வானிலை மையம் அறிவிப்பு
ADDED : ஆக 31, 2025 11:41 AM

சென்னை: சென்னை மணலியில் மேகவெடிப்பு காரணமாக, நேற்றிரவு 271.5 மி.மீ மழை கொட்டி தீர்த்துள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையின் மணலி, கொரட்டூர், வடபழனி, கத்தியவாக்கம், திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்றிரவு கனமழை கொட்டியது. இதன் காரணமாக சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.
வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். நகரின் மணலி, லிம்கா நகர் போன்ற பகுதிகளில் அதிகனமழை பெய்தது. மணலியில் மிக மிக பலத்த மழைக்கு மேக வெடிப்பே காரணம் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விபரம் மி.மீட்டரில் பின்வருமாறு:
மணலி- 271.5
மணலி புது டவுன்- 255.6
விம்கோ நகர்-228.6
கொரட்டூர்- 182.4
கத்திவாக்கம்- 136.5
திருவொற்றியூர்-126
அயப்பாக்கம்- 121.8
பாரிஸ்-115.5
அம்பத்தூர்- 112.2
நெற்குன்றம்- 110.4