தண்ணீர் பிரச்னை குறித்து த.வெ.க., - எம்.எல்.ஏ.,விடம் விபரங்கள் கேட்ட முதல்வர்
தண்ணீர் பிரச்னை குறித்து த.வெ.க., - எம்.எல்.ஏ.,விடம் விபரங்கள் கேட்ட முதல்வர்
ADDED : ஆக 25, 2026 12:33 AM
சென்னை: த.வெ.க., - விஜய்: உசிலம்பட்டி, 58 கால்வாய் பாசனத்திற்கு நிரந்தர அரசாணை வெளியிட வேண்டும். தண்ணீர் இல்லாமல், மக்கள் வாடிக் கொண்டு இருக்கின்றனர். கடந்த 30 ஆண்டுகளில், 20,000 குடும்பங்கள், வெளி மாநிலத்திற்கு சென்று வேலைபார்க்கின்றன.
தி.மு.க., - எ.வ.வேலு: உசிலம்பட்டி எம்.எல்.ஏ., கன்னி பேச்சு என்று கூறிவிட்டு குற்றச்சாட்டுகளை சொல்லிக் கொண்டே இருக்கிறார். மழை பெய்தால் தான் தண்ணீர் வரும்.
அமைச்சர் ராஜ்மோகன்: குரலற்றவர்களின் குரலாக உசிலம்பட்டி எம்.எல்.ஏ., பேசுகிறார். எல்லா பேச்சு இனிப்பாக இருக்காது; சில கசப்பானவைகளும் இருக்கும்.
த.வெ.க., - விஜய்: பேப்பரில் அறிவித்து விட்டால் மட்டும் திட்டம் நடைமுறைக்கு வந்து விடாது. உசிலம்பட்டி மக்கள் செல்வச் செழிப்பாக இல்லை; 80 சதவீத மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி, பொங்கலுக்கு வாங்கிய சட்டைகளையே ஒரு ஆண்டாக போட்டுக் கொண்டுள்ளனர். அதைத்தான் சொல்கிறேன்.
இதையடுத்து, உசிலம்பட்டி எம்.எல்.ஏ.,வை முதல்வர் விஜய் அழைத்தார். உசிலம்பட்டி தொகுதி தண்ணீர் பிரச்னை, 58 கால்வாய் பிரச்னை தொடர்பான விபரங்களை, தன் உதவியாளரிடம் வழங்குமாறு முதல்வர் விஜய் கூறினார்.
