ADDED : நவ 28, 2024 06:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை; தமிழக எதிர்க்கட்சி துணைத் தலைவர் உதயகுமார் அளித்த பேட்டி:
தமிழகத்தில் திரும்பிய திசை எங்கும் தி.மு.க., அரசின் மீது மக்கள் கோபம் கொண்டுள்ளனர். மக்கள், அரசு ஊழியர்கள், வருவாய்த் துறை பணியாளர்கள் என அனைவரும் போராடி வருகின்றனர். இதனால், தமிழகமே போராட்டக் களமாக உள்ளது.
'வடகிழக்கு பருவ மழையால் பயிர்கள் சேதம் அடையவில்லை' என வருவாய்த் துறை அமைச்சர் கூறி இருக்கிறார். அதே நேரம் நாகை, திருவாரூர் போன்ற மாவட்டங்களில் மிகப் பெரிய அளவில் பயிர் சேதம் அடைந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
வருவாய்த் துறையில் தொடர்ந்து பணியிடங்கள் பறிபோகும் அவலம் உள்ளது. இதை சுட்டிக்காட்டி வருவாய்த் துறையினர் போராட்டம் நடத்தி இருக்கின்றனர். இதற்கு தீர்வு காண முதல்வர், அமைச்சருக்கு நேரமில்லை; அக்கறை இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.