ADDED : மே 23, 2025 06:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பிரதமர் மோடி தலைமையில் 'நிடி ஆயோக்' கூட்டம், வரும் 24ம் தேதி டில்லியில் நடக்கிறது. இதில் பங்கேற்க, முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை சென்னையில் இருந்து விமானத்தில் டில்லி செல்கிறார்; அங்கு, முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேசுகிறார். மறுநாள், நிடி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்று, தமிழகத்தின் நிதி தேவைகளை பூர்த்தி செய்யும்படி ஸ்டாலின் வலியுறுத்த உள்ளார்; கூட்டம் முடிந்து, அன்றே சென்னை திரும்புகிறார்.
இன்று இரவு அல்லது நாளை பிரதமர் மோடியை தனியாக சந்தித்து பேச, முதல்வர் ஸ்டாலின் தரப்பில் நேரம் கேட்கப்பட்டுள்ளது; அனுமதி கிடைத்தால், பிரதமரை சந்தித்து பேசுவார் என, தி.மு.க., வட்டாரங்கள் தெரிவித்தன.
- நமது நிருபர் -