sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

செய்திகள்

/

தமிழகம்

/

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா அனுமதி தருவதா? மத்திய அரசு மீது பாய்கிறார் முதல்வர் ஸ்டாலின்

14

ADDED : மார் 06, 2026 07:18 PM

Google News

14

ADDED : மார் 06, 2026 07:18 PM

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: நம் நாட்டிற்கான எரிசக்தி தேவைகளை உறுதி செய்ய, இந்தியா ஏன் மற்றொரு நாட்டின் ஒப்புதலை பெற வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுகுறித்து அவரது பதிவு:

ரஷ்யாவில் இருந்து வெறும் 30 நாட்களுக்கு மட்டுமே இந்தியா எண்ணெய் வாங்க அமெரிக்கா அனுமதி அளிப்பது என்ற முடிவு எதன் அடிப்படையில் என்ற கேள்விளை எழுப்புகிறது. நமது சொந்த எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்ய ஏன் மற்றொரு நாட்டின் ஒப்புதல் தேவை.

இந்தியாவில், விசாகப்பட்டினத்தில் இந்தியா நடத்திய 2026ம் ஆண்டுக்கான சர்வதேச கடற்படை பயிற்சியில் கலந்து கொண்ட உடனேயே, ஆயுதங்கள் ஏந்தாத ஈரான் போர்க்கப்பல் ஐஆர்ஐஎஸ் டெனா(IRIS Dena)வை அமெரிக்கா தாக்குதலில் மூழ்கடித்திருப்பது கவலை தருகிறது.

ஒரு சர்வதேச பயிற்சியில் இந்தியாவிற்கு வந்து சென்ற ஒரு கப்பலுக்கு இத்தகைய கதி ஏற்படும் போது இந்தியா மவுனமாகவும், செயல்பாடு இல்லாமலும் இருக்க முடியாது. நாட்டின் நீண்டகால மரபான பிறநாடுகளின் அழுத்தத்திற்கு பணியாமல் முடிவெடுத்தல் (Strategic Autonomy) மற்றும் வெளியுறவுக் கொள்கையில் சமரசம் செய்ததாக தெரிகிறது. பன்னாட்டு அரங்கில் இந்தியாவின் கண்ணியம், இறையாண்மை மற்றும் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பதிவில் குறிப்பிட்டு உள்ளார்.

      Dinamalar
      Follow us