எண்ணிலடங்கா நினைவுகளுடன் தாயகம் திரும்புகிறேன்: முதல்வர் ஸ்டாலின்
எண்ணிலடங்கா நினைவுகளுடன் தாயகம் திரும்புகிறேன்: முதல்வர் ஸ்டாலின்
ADDED : செப் 07, 2025 07:49 AM

சென்னை: எண்ணிலடங்கா நினைவுகளுடன் தாயகம் திரும்புகிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார்.
முதல்வர் ஸ்டாலின், தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக ஜெர்மனி மற்றும் பிரிட்டனுக்கு சென்று இருந்தார். வெவ்வேறு தொழில் நிறுவன நிர்வாகிகள், புலம் பெயர்ந்த தமிழர்கள், அந்தந்த நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகள் ஆகியோரை சந்தித்து பேசினார்.
பயணம் முடிவில் அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவு விவரம்:
ஜெர்மனியில் தமிழர்கள் அளித்த உற்சாக வரவேற்புடன் தொடங்கிய பயணம், லண்டன் மாநகரில், அவர்கள் வாழ்த்தி வழியனுப்ப நிறைவுறுகிறது.
அளவில்லா அன்பு பொழிந்த உள்ளங்களின் எண்ணிலடங்கா நினைவுகளுடன் தாயகம் திரும்புகிறேன்.
இத்தனை நாளும் தங்கள் சகோதரனாய் என்னை கவனித்துக்கொண்ட புலம்பெயர் தமிழர்களுக்கு என் அன்பை நன்றியாய் நவில்கிறேன்.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.