தைரியமாக இருங்க; உத்தரகண்ட் நிலச்சரிவில் சிக்கியவர்களுக்கு தெம்பூட்டிய ஸ்டாலின்
தைரியமாக இருங்க; உத்தரகண்ட் நிலச்சரிவில் சிக்கியவர்களுக்கு தெம்பூட்டிய ஸ்டாலின்
UPDATED : செப் 15, 2024 09:42 PM
ADDED : செப் 15, 2024 01:09 PM

சென்னை: 'உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய தமிழர்களை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம்' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
உத்தரகண்டின் ஆதிகைலாஷ் கோவிலுக்கு சென்ற கடலூரை சேர்ந்த பக்தர்கள் 30 பேர், நிலச்சரிவில் சிக்கினர். அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்து உள்ளது. பாதிக்கப்பட்டவருடன் தொலை பேசியில் கலந்துரையாடும் காணொளியை சமூகவலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் பகிர்ந்துள்ளார். சிக்கி உள்ள தமிழர்களுக்கு அனைத்து நடவடிக்கையும் எடுப்பதாகவும், தைரியமாக இருக்கும்படியும் போனில் ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.
நடவடிக்கை
அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,'உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய தமிழர்களை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம். அங்கு பாதுகாப்பாக உள்ள தமிழர்களில் ஒருவரான பராசக்தி என்பவரை தொடர்புகொண்டு பேசினேன். பாதிக்கப்பட்டுள்ளவர்கள் நலமுடன் தங்களது ஊருக்குத் திரும்ப அனைத்து உதவிகளையும் செய்து வருகிறோம்' எனக் குறிப்பிட்டுள்ளார்.