தெளிவாக சொல்கிறேன், தமிழகம் தலைவணங்காது: முதல்வர் ஸ்டாலின்
தெளிவாக சொல்கிறேன், தமிழகம் தலைவணங்காது: முதல்வர் ஸ்டாலின்
ADDED : ஜூலை 11, 2025 03:48 PM

சென்னை: தெளிவாக சொல்கிறேன், தமிழகம் தலைவணங்காது என்று முதல்வர் ஸ்டாலின் மீண்டும் திட்டவட்டமாக கூறி உள்ளார்.
இது குறித்து அவர் தமது சமூக வலைதள பதிவில் கூறி உள்ளதாவது;
சர்வதேச மக்கள் தொகை தினத்தில் மத்திய அரசுக்கு ஒரு நினைவூட்டல்.
மக்கள்தொகை கட்டுப்பாட்டில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது. பெண்களுக்கு கண்ணியத்துடன் அதிகாரம் அளிக்கிறது. அனைவருக்கும் சுகாதாரம், கல்வியை வழங்குகிறது. வெற்றிகரமான, நிலையான வளர்ச்சியை பெற்றுள்ளது. ஆனால் இன்னமும் நமக்கு கிடைத்தது என்ன?
குறைவான தொகுதிகள், குறைந்த நிதி. நாடாளுமன்றத்தில் தொடர்ந்து வெளியேற்றப்படும் எங்களின் குரல்.
ஏன்? ஏனென்றால் தமிழகம் சரியானதைச் செய்தது, அது டில்லியை அச்சுறுத்துகிறது. பழனிசாமியும், அவரின் கட்சியும், தமிழகத்துடன் அல்ல, டில்லியுடன் நிற்பது இன்னும் மோசமானது.
நமது முன்னேற்றத்தை தண்டிக்கும் தொகுதி மறு சீரமைப்பை அவர்கள் ஆதரிக்கிறார்கள். ஆனால் நான் ஒன்றை தெளிவாக சொல்கிறேன். தமிழகம் எப்போதும் தலைவணங்காது.
நாம் ஒன்றாக எழுவோம். இது ஓரணி Vs டில்லி அணி. மண், மொழி, மானம் ஆகியவற்றை காக்க ஓரணியில் தமிழ்நாடு என்ற இயக்கத்தின் கீழ் இணைவோம்.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார்.