நிலக்கரி சரக்கு போக்குவரத்து ரயில்வேயில் 22.5 சதவீதம் அதிகரிப்பு
நிலக்கரி சரக்கு போக்குவரத்து ரயில்வேயில் 22.5 சதவீதம் அதிகரிப்பு
ADDED : அக் 25, 2026 02:31 PM
சென்னை: மின் தேவை அதிகரித்துள்ளதால், நாடு முழுதும் நிலக்கரி எடுத்து செல்வதில் , ரயில்வே புதிய சாதனை படைத்துள்ளது. கடந்த ஆண்டை விட நிலக்கரி சரக்கு போக்குவரத்து, 22 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
நாட்டில் தொழில்துறை உற்பத்தி அதிகரித்து வருவதால், மின்சாரத்தின் தேவையும் உயர்ந்து வரு கிறது. எனவே, நிலக்கரியை பயன்படுத்தி, மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான தேவை அதிகரித்துள்ளது.
அனல்மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரியை, உரிய நேரத்தில் கொண்டு சேர்ப்பதில், ரயில்வே முக்கிய பங்காற்றி வருகிறது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரையிலான நிலவரத்துடன் ஒப்பிடும் போது, இந்த ஆண்டு தினமும் சராசரியாக, 87 கூடுதல் நிலக்கரி சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன.
ந
நடப்பு நிதியாண்டில் முதல் ஆறு மாதங்களில், அனல் மின்நிலையங்களுக்கு, தினமும் சராசரியாக, 430 நிலக்கரி சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு நிலவரத்துடன் ஒப்பிடும் போது, 7.1 சதவீதம் அதிகமாகும்.
அதேபோல, கடந்த செப்டம்பர் மாதம், நிலக்கரி சரக்கு ரயில்களின் தினசரி இயக்கம், முந்தைய ஆண்டு செப்டம்பருடன் ஒப்பிடும் போது, 14 சதவீதம் அதிகரித்துள்ளது.
ரயில்வேயின் தொடர் நடவடிக்கைகளால், அனல் மின் நிலையங்களில், நிலக்கரி இருப்பை சீராக பராமரிக்க முடிகிறது. இது, மின் உற்பத்தி தடையின்றி நடக்க உதவியாக உள்ளது.
நிலக்கரியை சுரங்கப் பகுதிகளில் இருந்து, விரைவாகக் கொண்டு செல்வதற்காக, மத்திய நிலக்கரி துறையுடன், இந்திய ரயில்வே இணைந்து செயல்படுகிறது.
அனல் மின் நிலையங்களுக்கு, தொடர்ந்து நிலக்கரி விநியோகம் செய்ய, மத்திய மின்சார துறையுடன் ஒருங்கிணைந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
ந
நாட்டின் எரிசக்தி தேவையை பூர்த்தி செய்வதுடன், அனல் மின் நிலை யங்களில், போதிய நிலக்கரி இருப்பை உறுதி செய்வதற்காக, இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
நிலக்கரி சரக்கு போக்குவரத்தில், ரயில்வே வரலாற்று சாதனை படைத்துள்ளது. அக்.,18ம் தேதி வரையிலான காலகட்டத்தில், கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும் போது, நிலக்கரியை கையாள்வது, 22.5 சதவீதம் அதிகரித்துள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
