ADDED : மே 01, 2025 12:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:கோடை விடுமுறையையொட்டி, கோவையில் இருந்து பெரம்பூர் வழியாக, ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை:
கோவையில் இருந்து, வரும் 2, 9, 16, 23ம் தேதிகளில், காலை 11:50க்கு புறப்படும் சிறப்பு ரயில், அடுத்த மூன்றாம் நாள் காலை 8:30 மணிக்கு தன்பாத் செல்லும்
தன்பாத்தில் இருந்து, வரும் 5, 12, 19, 26ம் தேதிகளில், காலை 6:00க்கு புறப்படும் சிறப்பு ரயில், அடுத்த மூன்றாம் நாள் அதிகாலை, 3:45 மணிக்கு கோவை செல்லும். இந்த சிறப்பு ரயில்கள், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, சென்னை பெரம்பூர் வழியாக இயக்கப்படும். இந்த ரயில்களில் டிக்கெட் முன்பதிவு துவங்கி உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.