UPDATED : டிச 16, 2024 06:54 PM
ADDED : டிச 16, 2024 06:37 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தின் முக்கிய குற்றவாளி பாஷா தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
கோவையில் 1998ம் ஆண்டு பிப்., மாதம், 14ந் தேதி தொடர் குண்டு வெடிப்பு நடைபெற்றது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான அல் உம்மா அமைப்பின் தலைவர் பாஷா கைது செய்யப்பட்டார். அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் கடந்த பிப்., மாதம் 18ம் தேதி ஜாமினில் வந்தார்.
உடல்நிலை பாதிப்பு காரணமாக கோவை பீளமேடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.