ADDED : நவ 25, 2025 05:45 AM

தமிழகத்தில் இரண்டாவது பெரிய மாநகரம், தென் மாநிலங்களின், 'மான்செஸ்டர்' என்ற சிறப்புடைய கோவை, கடந்த 1804ல் மாவட்டமாக உருவாகி, இன்று 221 ஆண்டுகள் கடந்திருக்கின்றன. இது, மகிழ்ச்சியும், பெருமையும் அளிக்கிறது. ஆங்கிலேயர் காலத்தில், சாதாரண நிலப்பரப்பாக இருந்தது. கடந்த 200 ஆண்டுகளில், கோவை மக்களின் கடின உழைப்பால், இன்று, பல லட்சம் மக்களுக்கு வாழ்வளிக்கும் நகரமாக உருவாகி இருக்கிறது.
கல்வி நிலையங்கள், தொழில் துறைகள், விவசாயம் என, நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும், கோவைக்கு தனி இடம் உண்டு. சுவையான சிறுவாணி தண்ணீர், இனிமையான கொங்கு தமிழ், அற்புதமான தட்ப வெப்பநிலை, அன்பான மக்கள் ஆகியவற்றுக்கு பெயர்பெற்ற கோவை, தி.மு.க., அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகளால் இன்று புறக்கணிக்கப்பட்டு வருகிறது. விரைவில் கையாலாகாத தி.மு.க., ஆட்சியை அகற்றி, கோவையின் பெருமையை மீட்டெடுப்போம்.
- அண்ணாமலை, முன்னாள் தலைவர், தமிழக பா.ஜ.,

