கிரைண்டருடன் தீபாவளி பரிசு 'குஷி'யில் கோவை தி.மு.க.,
கிரைண்டருடன் தீபாவளி பரிசு 'குஷி'யில் கோவை தி.மு.க.,
ADDED : அக் 18, 2025 07:11 AM

கோவை: சட்டசபை தேர்தலுக்கு தி.மு.க., படுவேகமாக தயாராகி வருகிறது. இந்நிலையில், கோவை மாவட்டத்தில் தீபாவளியையொட்டி, ஓட்டுச்சாவடி பொறுப்பாளர்களுக்கு கிரைண்டர் உள்ளிட்ட பரிசு பொருட்களை தி.மு.க., நிர்வாகிகள் வாரி வழங்கி வருகின்றனர்.
இது குறித்து, தி.மு.க.,வினர் கூறியதாவது:
கோவையில் மாநகர் மாவட்ட இளைஞரணி தி.மு.க., அமைப்பாளர் தனபாலின் மனைவி அம்பிகா, 27வது வார்டு கவுன்சிலராக உள்ளார். இவரது பகுதியில் உள்ள, 11 ஓட்டுச்சாவடிகளில், தலா 10 உறுப்பினர்கள் இருக்கின்றனர். இவர்களுக்கு, வேட்டி, சட்டை, சேலை, அரை கிலோ ஸ்வீட், அரை கிலோ காரம் ஆகியவற்றுடன் கிரைண்டர் வழங்கியுள்ளார்.
இதேபோல, ஆர்.எஸ்.புரம் பகுதி கழக பொறுப்பாளர் கார்த்திக் செல்வராஜ், மாவட்ட செயலர் தொண்டாமுத்துார் ரவி, பகுதி கழக செயலர் சந்தோஷ் உள்ளிட்டோர், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பூத் கமிட்டியினருக்கு பரிசுகளை வாரி வழங்குகின்றனர். கட்சியின் உயர் பொறுப்பில் உள்ளவர்களும், தங்கள் சக்திக்கு ஏற்ப தீபாவளி பரிசு வழங்கி வருகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.