கோவையில் கைதி மரணம் எதிரொலி; சிறைக்காவலர்கள் 4 பேர் சஸ்பெண்ட்
கோவையில் கைதி மரணம் எதிரொலி; சிறைக்காவலர்கள் 4 பேர் சஸ்பெண்ட்
ADDED : ஜன 29, 2025 09:41 AM

கோவை; கோவையில் கைதி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில் சிறைக்காவலர்கள் 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர்.
நெல்லை மாவட்டம் சுந்தரபுரத்தைச் சேர்ந்தவர் ஏசுதாஸ், 33. திருப்பூர் ரூரல் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர். இவர் கோவை மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார்.
இரண்டு நாட்களுக்கு முன் சிறையில் உள்ள தொழிற்கூடத்தில் பணியாற்றிய அவர், அதன் பின்னர் மாயமானதாக தெரிகிறது. நீண்ட நேரம் கடந்தும், ஏசுதாஸ் வராமல் போகவே, சிறைத்துறை அதிகாரிகள் தேடி உள்ளனர்.
அப்போது கழிவறையில் கழுத்து எலும்பு முறிக்கப்பட்டு, சடலமாக கிடந்துள்ளார். அவர் கொல்லப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது. ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கைதியின் மர்ம மரணத்தை அடுத்து, சிறை அலுவலர்கள், காவலர்கள் 4 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிறைக் கைதிகளுக்கு பொறுப்பான மனோரஞ்சிதம், விஜயராஜ், பாபுராஜ் மற்றும் தினேஷ் ஆகிய நால்வரும் கண்காணிப்பாளர் செந்தில் உத்தரவுப்படி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.