நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: காரமடை அருகேவுள்ள ஸ்ரீசக்தி பொறியியல் கல்லூரியில் ஆண்டு விழாவும், ஆசிரியர் தின விழாவும் கொண்டாடப்பட்டது.
கல்லூரி தலைவர் தர்மலிங்கம் தலைமை வகித்தார். அறங்காவலர் முருகன் முன்னிலை வகித்தார். எலைட் குழுமத்தின் நிறுவனர் பிரதீப்குமார் மற்றும் பலர் பேசினர். கோவை மாவட்டத்தில் 25 ஆண்டுகள் ஆசிரியர்களாக பணியாற்றிய 20 பேரை தேர்வு செய்து, அவர்களுக்கு நல்லாசிரியர் விருதும், ரொக்கம், நினைவுப்பரிசு ஆகியவை வழங்கப்பட்டன. பல்கலைக்கழக தேர்வில் கல்லூரி அளவில் சாதனை புரிந்த மாணவர்களுக்கும், 40 ஆசிரியர்களுக்கும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. கல்லூரி முதல் வர் வேல்முருகன் வரவேற்றார். தாளாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.