UPDATED : பிப் 12, 2024 10:45 PM
ADDED : பிப் 12, 2024 10:42 PM

ஊட்டி:ஊட்டியில் கல்லூரி மாணவி மர்ம சாவு குறித்து போலீசார் வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊட்டி அருகே பாம்பேகேசில் பகுதியை சேர்ந்த ஆகாஷ், 20, ஊட்டியில் உள்ள தனியார் கல்லூரியில், இரண்டாமாண்டு இன்ஜினியரிங் படித்து வந்தார். ஊட்டி பிங்கர் போஸ்ட் பகுதியை சேர்ந்த, 19 வயது நர்சிங் கல்லூரி மாணவி கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இருவரும் பள்ளி நண்பர்கள். கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், வார விடுமுறையை ஒட்டி கடந்த சனிக்கிழமை அந்த பெண்ணை வாலிபர் வீட்டில் யாரும் இல்லாததால் வீட்டுக்கு அழைத்து சென்று இருவரும் மது அருந்தி உள்ளனர் .
இன்ஸ்பெக்டர் முரளிதரன் கூறுகையில், சனிக்கிழமை பாம்பே கேசில் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் மது பாட்டில்களை வாங்கி கொண்டு இருவரும் வாலிபர் வீட்டுக்கு சென்றனர். இருவரும் மது அருந்தி உல்லாசமாக இருந்துள்ளனர். பின், வாலிபர் கொண்டு வந்த போதை காளானை இருவரும் சாப்பிட்டுள்ளனர். போதை தலைக்கேறி இருவரும் படுத்துள்ளனர், இதில், அந்த பெண் மூச்சு திணறி இறந்துள்ளார். மறுநாள் இதை பார்த்த அந்த வாலிபர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்துள்ளார். மருத்துவ ஊழியர்கள் பரிசோதித்ததில் அந்த பெண் ஏற்கனவே இறந்தது தெரிய வந்தது. பின், போலீசாருக்கு தகவல் வந்ததை அடுத்து அங்கு சென்று சோதனையிட்டதில், மதுபாட்டில்கள், போதை காளான் இருந்தது தெரிய வந்தது. கல்லூரி மாணவி மர்ம சாவு குறித்து வாலிபர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. என்றார்.