உள்ளடக்கத்திற்கு செல்ல
UPDATED : அக் 02, 2026 12:00 AM
ADDED : அக் 01, 2026 06:16 PM
அ நிறம் | அளவு
சென்னை: பொதுத் துறையை சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, மாதந்தோறும் முதல் நாளில் உள்நாட்டில் சமையல் காஸ் சிலிண்டர் விலையை மாற்றுகின்றன.
தமிழகத்தில், இம்மாதம் வீட்டு காஸ் சிலிண்டர் விலை மாற்றம் செய்யப்படாமல், 957.50 ரூபாயாகவே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வணிக பயன்பாட்டிற்கான சமையல் காஸ் சிலிண்டர் விலை, 66.50 ரூபாய் உயர்ந்து, 2,916.50 ரூபாயில் இருந்து, 2,983 ரூபாயாக அதிகரித்துள்ளது.
