ADDED : டிச 02, 2024 02:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், வீடுகளுக்கு, 14.20 கிலோ எடையிலும், ஹோட்டல் உள்ளிட்ட வணிக பயன்பாட்டிற்கு, 19 கிலோ எடையிலும் சமையல் காஸ் சிலிண்டர்களை வினியோகம் செய்கின்றன.
இந்நிறுவனங்கள், மாதந்தோறும் முதல் நாளன்று, உள்நாட்டில் சமையல் காஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்கின்றன.
தமிழகத்தில் இம்மாதமும், வீட்டு சிலிண்டர் விலை மாற்றம் செய்யப்படாமல், 818.50 ரூபாயாகவே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை, 16 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
அதாவது, 1,964.50 ரூபாயிலிருந்து, 1,980.50 ரூபாயாக அதிகரித்துள்ளது.