புதிய குற்றவியல் சட்டங்களில் மாநில அளவில் திருத்தம் செய்ய குழு
புதிய குற்றவியல் சட்டங்களில் மாநில அளவில் திருத்தம் செய்ய குழு
ADDED : ஜூலை 08, 2024 05:59 PM

சென்னை: மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களில் மாநில அளவில் திருத்தம் செய்ய குழு அமைத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களில் என்னென்ன சட்ட திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர், தலைமை வழக்கறிஞர், தலைமை செயலாளர், உள்துறை, செயலாளர், போலீஸ் டிஜிபி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதன் முடிவில், புதிய சட்டங்களில் மாநில அளவில் பெயர் மாற்றம் உள்பட என்னென்ன திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் என்பதை ஆராய்ந்து அரசுக்கு பரிந்துரை செய்ய ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சத்யநாராயணன் தலைமையில் ஒருநபர் குழு அமைக்க ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். புதிய சட்டங்கள் குறித்து தெளிவாக ஆராய்ந்து, பல்வேறு தரப்பினருடன் ஆலோசித்து மாநில அளவில் என்னென்ன திருத்தங்களை கொண்டு வரலாம் என்பது குறித்து ஒரு மாதத்தில் இக்குழு அரசுக்கு அறிக்கை அளிக்கும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.