ADDED : ஜூலை 20, 2011 07:09 PM
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் சுப்பிரமணியபுரத்தில், ஒன்றரை வயது குழந்தையுடன் தந்தை மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்ட சம்பவம், மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் வேலாயுதம் (35). டிரைவரான இவர், அண்டை மாநிலங்களில் அடிக்கடி சென்று வருவார். குடிபழக்கத்தால் பாதிக்கப்பட்ட இவருக்கும், இவரது மனைவிக்கும் அடிக்கடி சண்டைகள் நிகழ்ந்தவண்ணம் இருந்தது. இந்நிலையில், இன்று சண்டை முற்றியது. வோலயுதம், தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண்டார். அருகில் இருந்த ஒன்றரை வயது குழந்தை ஜோதிகாவையும் கட்டிப் பிடித்துக் கொண்டார். சிறிதுநேரத்தில், இருவரும் தீக்கிரையாயினர். சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்திலிருந்தவர்கள் கூடினர். இதில், மாடசாமி மற்றும் அவரது தாய் மாணிக்கத்திற்கு தீக்காயங்கள் ஏற்பட்டது. இந்த சம்பவத்தால், அங்கு பெரும்பரபரப்பு நிலவி வருகிறது.