மருத்துவமனையில் மத பிரசாரம்; கலெக்டரிடம் ஆதாரத்துடன் புகார்
மருத்துவமனையில் மத பிரசாரம்; கலெக்டரிடம் ஆதாரத்துடன் புகார்
ADDED : அக் 22, 2024 05:36 AM

துாத்துக்குடி: துாத்துக்குடி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், 1,000க்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். அவர்களிடம் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த சிலர், துண்டு பிரசுரங்களை வழங்கி, மத பிரசாரத்தில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக, ஹிந்து முன்னணி மாநகர் மாவட்ட தலைவர் இசக்கிமுத்துக்குமார், கலெக்டரிடம் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் உள்ள நோயாளிகளிடம், கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த சிலர் ஜெபம் செய்கிறோம் என்ற பெயரில், அவர்களை அணுகி வருகின்றனர். 'இயேசுவின் படத்துடன் துண்டு பிரசுரங்கள் மற்றும் பைபிள் வழங்கி மத மாற்றம் செய்கின்றனர்.
கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர்களின் இத்தகைய மதமாற்றப் போக்கு ஏழ்மையிலும், நோயிலும் துன்பப்படும் ஹிந்து மக்கள் மனதில் குழப்பத்தையும் வேதனையும் தருகிறது. இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, மதமாற்றத்தை தடுத்து நிறுத்த வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மேலும், போட்டோ, வீடியோ ஆதாரங்களையும் அவர் மனுவுடன் இணைத்துள்ளார்.