உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : ஜூலை 22, 2026 11:04 PM
அ நிறம் | அளவு
சென்னை: சென்னையில் உள்ள மின் வாரிய தலைமை அலுவலக வளாகத்தில், மின்னகம் நுகர்வோர் சேவை மையம் உள்ளது.
அங்கு, 94987 94987 மொபைல் போன் எண்ணில் மின் தடை, கூடுதல் மின் கட்டணம் வசூல் தொடர்பாக அனைத்து புகார்களையும், 24 மணி நேரமும் தெரிவிக்கலாம். தினமும் சராசரியாக, 2,500 - 3,000 புகார்கள் வருகின்றன.
இந்நிலையில், இம் மாதம் வெயில் கடுமையாக இருக்கிறது; அதிகமான மின் பயன்பாடு காரணமாக, இரவில் சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில், பல இடங்களில் மின் தடை ஏற்படுகிறது.
இதனால், மின்னகத்தில் தினமும் பெறப்படும் புகார்களின் எண்ணிக்கை, 4,000ஐ தாண்டியுள்ளது.
