அரசியல் ஆதாயத்திற்காக வளர்ச்சியில் சமரசமா? நயினார் கேள்வி
அரசியல் ஆதாயத்திற்காக வளர்ச்சியில் சமரசமா? நயினார் கேள்வி
ADDED : ஜூலை 22, 2026 07:43 PM

சென்னை: தங்கள் அரசியல் ஆதாயங்களுக்காக, தமிழக வளர்ச்சியில் சமரசம் செய்யக்கூடாது என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது: நிதி ஆயோக் திட்டக்குழு அறிக்கையில், 'தமிழகத்தின் விமான நிலையங்கள், கழிவுநீர் மேலாண்மை உள்ளிட்ட உள்கட்டமைப்புகளில், மாநில அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டு உள்ளது.
இதை முதல்வர் விஜய், அரசியல் வேறுபாடுகளைக் கடந்து, கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழக சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார், பரந்துார் விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசியிருந்தார்.
பரந்துாரில் விமான நிலையம் அமைக்க முடியாது எனக் கூறும் தமிழக வெற்றிக் கழக அரசு, இதுநாள் வரை மாற்று இடத்தை தேர்வு செய்யாதது ஏன். இந்த அரசுக்கு, பரந்துாரில் விமான நிலையம் அமைப்பதில் பிரச்னையா, புதிய விமானம் நிலையம் கிடைப்பதில் பிரச்னையா?
நிதி ஆயோக் அறிக்கையின்படி, தமிழகத்தில் மேலும் ஒரு புதிய விமான நிலையம் அமைக்க, த.வெ.க., அரசு ஒத்துழைக்க வேண்டும். தங்கள் அரசியல் ஆதாயங்களுக்காக, தமிழக வளர்ச்சியில் சமரசம் செய்யக்கூடாது. இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.
