ADDED : பிப் 06, 2024 11:17 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழக அரசு சார்பில், 'பன்னாட்டு கணினித்தமிழ் - 24' மாநாடு, நாளை முதல் சென்னையில் மூன்று நாட்கள் நடக்க உள்ளது.
சென்னை வர்த்தக மையத்தில் நடக்கும் மாநாட்டில், அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி, அயர்லாந்து, சுவிட்சர்லாந்து, இலங்கை, மலேஷியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து மொழியியல் அறிஞர்களும், 'கூகுள், மைக்ரோசாப்ட்' உள்ளிட்ட நிறுவனங்களை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுனர்களும் பங்கேற்க உள்ளனர்.
செயற்கை நுண்ணறிவு, இயந்திர வழி கற்றல், இயற்கை மொழி செயலாக்கம், மொழி மாதிரிகள், நவீன மொழி தொழில்நுட்பங்கள் என, பல்வேறு தலைப்புகளில், 50க்கும் மேற்பட்ட வல்லுனர்களின் உரைகள், 40க்கும் மேற்பட்ட அமர்வுகள், குழு விவாதங்கள், மாநாட்டில் இடம்பெற உள்ளன.

