தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/காங்.,குக்கு 2 வாரிய தலைவர்கள் ஒதுக்கீடு? பதவியை கைப்பற்ற கட்சிக்குள் போட்டி

காங்.,குக்கு 2 வாரிய தலைவர்கள் ஒதுக்கீடு? பதவியை கைப்பற்ற கட்சிக்குள் போட்டி

காங்.,குக்கு 2 வாரிய தலைவர்கள் ஒதுக்கீடு? பதவியை கைப்பற்ற கட்சிக்குள் போட்டி

1


ADDED : செப் 29, 2026 07:55 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 29, 2026 07:55 PM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -

காங்கிரசுக்கு, தவெக அரசு வழங்கும், இரண்டு வாரிய தலைவர் பதவிகளை பெற, காங்கிரஸ் நிர்வாகிகளுக்குள் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

இடைத்தேர்தலுக்கு பின், காங்கிரசுக்கு இரண்டு வாரிய தலைவர் பதவிகள் வழங்க, தவெக அரசு முடிவெடுத்துள்ளது. அவற்றை பெற, காங்., மூத்த தலைவர்கள் சிதம்பரம், தங்கபாலு, திருநாவுக்கரசர், அழகிரி, பீட்டர் அல்போன்ஸ், செல்வப்பெருந்தகை ஆகியோரின் ஆதரவாளர்கள் மத்தியில் போட்டி நிலவுகிறது.

முன்னாள் எம்எல்ஏக்கள் சிலரும், தங்கள் பொருளாதார செல்வாக்கை பயன்படுத்தி, பதவியை பெற முயற்சிக்கின்றனர். ஆனால், 'பணம் படைத்த தொழிலதிபர்களுக்கு வாரிய தலைவர் பதவி வழங்கக் கூடாது' என்ற கோரிக்கை, அக்கட்சியில் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலுக்கு, தமிழக காங்., நிர்வாகிகள் சிலர் அனுப்பியுள்ள கடிதம்:

வாரிய தலைவர் நியமனத்தில் அரசியல் அனுபவம், மக்கள் செல்வாக்கு, கட்சி மீது விசுவாசம் ஆகியவற்றிற்கு முக்கியத்தும் அளிக்க வேண்டும். பணம் மட்டுமே வைத்துக் கொண்டு, பகுதி நேர அரசியல் செய்பவர்களுக்கு வாரிய தலைவர் பதவி வழங்கக் கூடாது. தகுதி அடிப்படையில் வழங்கினால் தான், கட்சி தொண்டர்கள் ஏற்றுக் கொள்வர்.

இரு பதவி என்றால், அதில் ஒருவர் பெண்ணாக இருக்க வேண்டும். எம்.எல்.ஏ.,க்கள் சிலரும் வாரிய தலைவர் பதவியை விரும்புகின்றனர். ஒருவருக்கு ஒரு பதவி அடிப்படையில், எம்எல்ஏக்களின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ---

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us