காங்., வேட்பாளர் 7 பேர் பட்டியல் வெளியீடு: சிட்டிங் எம்.பி.க்களுக்கு மீண்டும் வாய்ப்பு
காங்., வேட்பாளர் 7 பேர் பட்டியல் வெளியீடு: சிட்டிங் எம்.பி.க்களுக்கு மீண்டும் வாய்ப்பு
UPDATED : மார் 23, 2024 11:22 PM
ADDED : மார் 23, 2024 11:09 PM

சென்னை: லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் 7 பேர் கொண்ட காங்., வேட்பாளர்கள்பட்டியலை கட்சி மேலிடம் இன்று வெளியிட்டுள்ளது. தி.மு.க, கூட்டணியில் மொத்தம் புதுச்சேரி உள்பட 10 இடங்களில் போட்டியிடுகிறது. திருச்சி உள்ளிட்ட ஒரு சில தொகுதிகள் காங்.கிடமிருந்து கூட்டணி கட்சிகளுக்கு மாற்றப்பட்டன.
இந்நிலையில் வேட்பாளர் தேர்வு காங். தலைவர் மல்லிகார்ஜூன கார்கே முன்னிலையில் நடைபெற்றது. வெளியிடப்பட்டுள்ள வேட்பாளர் பட்டியலில் சிட்டிங் எம்.பி.க்கள் நான்கு பேர் மீண்டும் போட்டியிடுகின்றனர். திருவள்ளூர் தொகுதி எம்.பி.யாக உள்ள ஜெயக்குமாருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
அதன் விவரம்
1) கன்னியாகுமரி: விஜய்வசந்த்
2) விருதுநகர்: மாணிக்கம் தாக்கூர்
3) சிவகங்கை: கார்த்தி சிதம்பரம்
4 )கரூர்: ஜோதிமணி.
5) கடலூர்: விஷ்ணுபிரசாத்
6) திருவள்ளூர்: சசிகாந்த் செந்தில்.
7) கிருஷ்ணகிரி: கோபிநாத். ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
மேலும் காங்., வெளியிட்டு உள்ள நான்காம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் உ.பி.,மாநிலம் வாரணாசி தொகுதயில் பிரதமர் மோடியை எதிர்த்து காங்.,சார்பில் அஜய் ராய் போட்டியிடுகிறார். அதே நேரத்தில் அமேதி ரேபரேலி தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவிக்காமல் உள்ளது.

