மும்மொழிக் கொள்கையில் காங்., நிலைப்பாடு என்ன? சீமான் கேள்வி
மும்மொழிக் கொள்கையில் காங்., நிலைப்பாடு என்ன? சீமான் கேள்வி
ADDED : பிப் 19, 2025 02:10 PM

மதுரை: மும்மொழிக் கொள்கையில் தி.மு.க.,வுடன் கூட்டணியில் உள்ள காங்கிரசுக்கு என்ன நிலைப்பாடு? என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.
மதுரையில் நிருபர்கள் சந்திப்பில் சீமான் கூறியதாவது: பொழுது போக்கு களத்தில் தலைவரைத் தேடுபவர்கள் என்னைத் தேட மாட்டார்கள்; நான் முன் வைக்கும் கோட்பாட்டை நம்புபவர்களே என்னைப் பின்தொடர்வார்கள். ஹிந்தியை ஏன் படிக்க வேண்டும்.
உங்கள் மொழி எப்படி உயர்வோ, அதேபோன்று தான் எங்கள் மொழி.மும்மொழிக் கொள்கையில் தி.மு.க.,வுடன் கூட்டணியில் உள்ள காங்கிரசுக்கு என்ன நிலைப்பாடு?
விரும்பினால் எந்த மொழியும் கற்கலாம் என்பதே எங்கள் நிலைப்பாடு. விஜய் கட்சியுடன் கூட்டணி எனக்கு ஒத்து வராது. இவ்வாறு சீமான் கூறினார்.
திருடுவது தான் வேலை!
மைக் புலிகேசி என்று டி.ஐ.ஜி., வருண் குமார் விமர்சித்தது குறித்த கேள்விக்கு, 'ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் அவரை (வருண் குமார்) பேசச் சொல்கிறார்கள். அனுமதிக்கிறார்கள், பதவி உயர்வு கொடுக்கிறார்கள்.
அதனால் தான் கட்சிக்காரர் போல் பேசுகிறார். பொறுப்புள்ள போலீஸ் அதிகாரியாக நடந்து கொள்ள வேண்டும். வருண் குமாரின் வேலையே செல்போனைத் திருடுவதும், அதிலுள்ள தரவுகளைத் திருடுவதும் தான்' என சீமான் பதில் அளித்தார்.

