ADDED : செப் 10, 2025 06:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கட்சி ஒன்றிணைந்தால் மட்டுமே அ.தி.மு.க.,வுக்கு வெற்றி கிட்டும் என, கடந்த மூன்று ஆண்டுகளாக கூறி வருகிறேன். முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், முழு உறுதியுடன் அதை செய்ய முன்வந்துள்ளார். அவருடைய எண்ணமும்; அதற்கேற்ற செயல்பாடுகளும் வெற்றியடைய, அதே எண்ணத்தில் இருக்கும் கட்சித் தொண்டனாக வாழ்த்துகிறேன். முன்னாள் மத்திய அமைச்சர் தம்பிதுரை, செங்கோட்டையன் விஷயத்துக்கு மாறான கருத்துச் சொல்லி உள்ளார். அதற்கெல்லாம் பதிலளிக்க விரும்பவில்லை.
- - பன்னீர்செல்வம், ஒருங்கிணைப்பாளர், அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு