திமுக கூட்டணி இருந்தால்தான் சட்டசபைக்குள் காங்., வர முடியும்: ரகுபதி
திமுக கூட்டணி இருந்தால்தான் சட்டசபைக்குள் காங்., வர முடியும்: ரகுபதி
ADDED : மார் 03, 2026 05:48 PM

புதுக்கோட்டை: '' திமுக உடன் இணைந்தால் தான் காங்கிரசுக்கு அரசியல் அந்தஸ்து கிடைக்கும் எனவும், சட்டசபைக்குள் வர முடியும்,'' என தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
புதுக்கோட்டையில் நிருபர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியதாவது: நாங்கள் சுமூகமாக தான் பேசுவோம். எங்கள் தலைவர் சரியான பாதையில் தான் கூட்டணியை அழைத்து செல்வார்.
தவெக உடன் திரைமறைவில் பேச்சு நடக்கிறது, அது, இது என சொல்வது எல்லாமே அவர்வர்கள் கப்சாவாக கிளப்பி விடும் விஷயம் தான். வேறு ஒன்றும் கிடையாது.நாங்கள் தெளிவாக இருக்கிறோம். இது அரசியல் கட்சி. இங்கு வந்தால் அரசியல் அந்தஸ்து கிடைக்கும் என்பது காங்கிரஸ் தலைமைக்கு தெரியும். இதனால் அரசியல் அந்தஸ்தை இழக்க விரும்ப மாட்டார்கள்.
தமிழகத்தில் திமுக உடன் கூட்டணி வைத்தால் தான் சட்டசபைக்குள் வர முடியும் என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும்.
விஜயிடம் யாரும் வரவில்லை. இதனால் காங்கிரசின் மதிப்பை புரிந்து இருக்கலாம். அவ்வளவு தான். ஆள் இல்லாத வீட்டில் என்ன வேண்டுமானாலும் கொண்டாடலாம். ஆள் இல்லாத வீடு அது. இவ்வாறு அவர் கூறினார்.

