ADDED : ஜூன் 20, 2025 01:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழக சட்டசபை காங்., தலைவர் ராஜேஷ்குமார் அளித்த பேட்டி:
தமிழகத்தில் தி.மு.க., கூட்டணியில் தான் நாங்கள் இருக்கிறோம். கூட்டணியில் இணக்கமான சூழல் தான் நிலவுகிறது. அதற்காக, மக்கள் பிரச்னைகளுக்கு காங்கிரஸ் எப்போதும் குரல் எழுப்பாமல் இருந்ததில்லை. மக்களுக்காக, காங்., தொடர்ந்து குரல் கொடுக்கும். காங்கிரஸ் கட்சியினருக்கும் தேர்தலில் நிறைய எதிர்பார்ப்புகள் உள்ளன. கட்சி நன்கு வளர்ந்துள்ளது.
அதனால், வரும் சட்டசபைத் தேர்தலுக்கு கூட்டணியில் கூடுதல் சீட்கள் பெற வேண்டும் என்ற எண்ணம் காங்கிரசார் அனைவருக்கும் உள்ளது. தேர்தல் சீட் பங்கீட்டின் போது, கடந்த முறை பெற்றதைக் காட்டிலும் கூடுதல் சீட் கேட்டு வலியுறுத்துவோம். அதேபோல, கூட்டணி ஆட்சி குறித்தும் வலியுறுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
-நமது நிருபர்-

