sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 காங்கிரஸ் பொதுச்செயலர் வரும் 17ல் சென்னை வருகை

/

 காங்கிரஸ் பொதுச்செயலர் வரும் 17ல் சென்னை வருகை

 காங்கிரஸ் பொதுச்செயலர் வரும் 17ல் சென்னை வருகை

 காங்கிரஸ் பொதுச்செயலர் வரும் 17ல் சென்னை வருகை


ADDED : பிப் 15, 2026 03:43 AM

Google News

ADDED : பிப் 15, 2026 03:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: காங்கிரஸ் தேசிய பொதுச்செயலர் வேணுகோபால், நாளை மறுதினம் சென்னை வருகிறார்.

சட்டசபை தேர்தலுக்காக, தி.மு.க.,வுடன் தொகுதிப் பங்கீடு பேச்சு நடத்த, கடந்த நவம்பரில், ஐவர் குழுவை காங்கிரஸ் தலைவர் கார்கே அமைத்தார். மூன்று மாதங்களாகியும், காங்கிரசுடன் பேச்சு நடத்த தி.மு.க., முன்வரவில்லை; அதற்கான குழுவையும் அமைக்கவில்லை.

இது குறித்து, காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கர், தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் தங்கள் அதிருப்தியை வெளியிட்டனர். அதைத் தொடர்ந்து, கூட்டணி கட்சிகளுடன் பேச்சு நடத்த விரைவில் குழு அமைக்கப்படும் என, தி.மு.க., தலைமை அறிவித்துள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் தேசிய பொதுச்செயலர் வேணுகோபால், நாளை மறுதினம் சென்னை வருகிறார். தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். அதைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலினை சந்திக்கவும் அவர் திட்டமிட்டுள்ளதாக காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தி.மு.க.,வுடன் கூட்டணி பேச்சு துவங்காததால், பிப்ரவரி முதல் வாரத்தில் சென்னை வருவதாக இருந்த வேணுகோபால், தன் பயணத்தை இருமுறை தள்ளிவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us