பிரதமருக்கு எதிராக போராட்டம்: வீட்டு காவலில் காங்., நிர்வாகிகள்
பிரதமருக்கு எதிராக போராட்டம்: வீட்டு காவலில் காங்., நிர்வாகிகள்
UPDATED : அக் 11, 2026 09:40 PM
ADDED : அக் 11, 2026 09:18 PM

சென்னை: பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கருப்பு கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற, 15க்கும் மேற்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், போலீசாரால் வீட்டு காவலில் வைக்கப்பட்டனர்.
சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க, பிரதமர் மோடி நேற்று சென்னை வந்தார். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கருப்பு கொடி காட்டுதல், கருப்பு பலுான்களை பறக்க விடுதல் போன்ற போராட்டங்களை நடத்த காங்கிரசார் திட்டமிட்டிருந்தனர். இதை அறிந்த போலீசார், சென்னையில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் சிந்துஜா ராஜு, நவ்ஷத் அலி, ஆனந்த்பாபு, ரஞ்சித்குமார், வெளி மாநிலங்களிலிருந்து வந்து, ஓட்டலில் தங்கியிருந்த, இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் பிந்தியா, சிபினா உட்பட, 15க்கும் மேற்பட்டோரை, வீட்டு காவலில் வைத்தனர். நவ்ஷத் அலி, ஆனந்த்பாபு ஆகியோரின் வீடுகளில் இருந்து, 30க்கும் மேற்பட்ட கருப்பு பலுான்கள், பதாகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
