உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜூலை 23, 2026 06:15 AM

அ நிறம் | அளவு
சென்னை: 'நீட்' தேர்வு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, தென் சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில், சென்னை, அம்பத்துார் தொழிற்பேட்டை சந்திப்பில், நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில், காங்கிரசை சேர்ந்த தமிழக அமைச்சர் ராஜேஷ் குமார், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற காங்கிரசார், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் புகைப்படத்தை தீயிட்டு கொளுத்தியதோடு, மத்திய பா.ஜ., அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
