தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ குற்றம்சாட்டப்பட்டோர் உடனான தொடர்பு கூட்டு சதி அல்ல: ஐகோர்ட் கருத்து

 குற்றம்சாட்டப்பட்டோர் உடனான தொடர்பு கூட்டு சதி அல்ல: ஐகோர்ட் கருத்து

 குற்றம்சாட்டப்பட்டோர் உடனான தொடர்பு கூட்டு சதி அல்ல: ஐகோர்ட் கருத்து


ADDED : ஆக 22, 2026 05:59 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 22, 2026 05:59 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: ''குற்றம் சாட்டப்பட்ட வர்கள் உடனான தொடர்பை வைத்து கூட்டுச் சதி என்று கூற முடியாது,'' என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

'இக்கி ரிசார்ட்ஸ் இன்டர் நேஷனல்' என்ற நிறுவனம், 71 லட்சம் ரூபாய் வருமான வரி பாக்கி வைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், அந்நிறுவனத்தின் சொத்துக்களை, 2,000ம் ஆண்டில் வருமான வரித்துறை முடக்கம் செய்தது.

சொத்து முடக்கத்தை நீக்குவதற்காக, வேறு ஒரு சொத்தை கணக்கு காட்டி மோசடி செய்ததாக, அப்போதைய வருமான வரித்துறை ஆணையர் திரிபாதி, இக்கி நிறுவன இயக்குநர்கள் சி.முத்துசாமி, ஜே.ஆர்.ராபின்சன் ஆகியோர் மீது, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்தது.

வழக்கை விசாரித்த சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம், நிறுவன இயக்குநர்கள் இருவருக்கும் மூன்று ஆண்டு சிறை தண்டனை விதித்து, 2017ல் உத்தரவிட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வருமான வரித்துறை ஆணையர் திரிபாதி விடுதலை செய்யப்பட்டார்.

தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து, இக்கி நிறுவன இயக்குநர்கள் சி.முத்துசாமி, ஜே.ஆர்.ராபின்சன் ஆகியோர், சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். மேல்முறையீட்டு மனுக்கள், நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தன.

அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, ''குற்றச்சாட்டுகளுக்கு தேவையான ஆதா ரங்களை சமர்ப்பிக்க, சி.பி.ஐ., தரப்பு தவறி விட்டது.''வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்பட்ட வருமான வரித்துறை ஆணையர் திரிபாதி விடுதலையை எதிர்த்து, சி.பி.ஐ., மேல்முறையீடு செய்யவில்லை'' என்று, வாதிட்டார்.

இதையடுத்து, நீதிபதி இளந்திரையன் பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கில், வருமான வரித்துறை மோசடி செய்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு இடையிலான தொடர்பை மட்டும் அடிப்படையாக கொண்டு, கூட்டுச்சதி குற்றத்தை நிரூபிக்க முடியாது.

மேலும், அவர்களுக்கு இடையே, முன்கூட்டியே குற்ற நோக்கத்துடன் கூடிய ஒருமித்த கருத்து இருந்தது என்பதை நிரூபிக்கும் நேரடி ஆதாரங்கள் இல்லை. கூட்டுச்சதி மற்றும் மோசடி குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை. எனவே, இக்கி நிறுவன இயக்குநர்கள் இருவரையும் விடுதலை செய்கிறேன். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us