sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தொகுதி மறுசீரமைப்பு கூட்டம்: தலைவர்கள் சொல்வது என்ன?

/

தொகுதி மறுசீரமைப்பு கூட்டம்: தலைவர்கள் சொல்வது என்ன?

தொகுதி மறுசீரமைப்பு கூட்டம்: தலைவர்கள் சொல்வது என்ன?

தொகுதி மறுசீரமைப்பு கூட்டம்: தலைவர்கள் சொல்வது என்ன?

8


ADDED : மார் 22, 2025 08:46 PM

Google News

ADDED : மார் 22, 2025 08:46 PM

8


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தொகுதி மறுவரையறை குறித்து சென்னையில் நடந்த கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் தொடர்பாக அந்த கூட்டத்தில் பங்கேற்றவர்கள் உள்ளிட்ட பலர் கருத்து தெரிவித்து உள்ளனர்.

கேரள முதல்வர் பினராயி விஜயன்


கூட்டாட்சி என்பது நமது இறையாண்மைமிக்க உரிமை. மத்திய அரசின் பரிசு அல்ல. முக்கியமான விஷயத்தை எழுப்புவதற்கு மேடை அமைத்து கொடுத்த முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த கொள்கிறேன். தொகுதி மறுவரையறை என்பது நேர்மையாகவும், ஆக்கப்பூர்வமானதாகவும் அமைய வேண்டும். கட்சி சார்ந்த லாபத்திற்கான கருவியாக அமைய கூடாது. நீதி, சமத்துவம் மற்றும் உண்மையான ஜனநாயகத்திற்கு ஒற்றுமையாக நிற்கிறோம்.

கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமார்


மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறை என்பது தொழில்நுட்ப காரணமாக இருக்க முடியாது. அது தென் மாநிலங்கள் மீதான அரசியல் ரீதியிலான தாக்குதல். இந்தியாவின் வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம், சமூக வளர்ச்சி மற்றும் மக்கள்தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தியதில் நமது மாநிலங்கள் நீண்ட காலமாக தூண்களாக இருக்கிறது. தற்போது, தேசியளவில் நமது குரல்களை குறைக்கும் வகையில், பார்லிமென்டரி பிரதிநிதித்துவத்தை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இது நேர்மையற்றது. வளர்ச்சி மற்றும் சிறந்த நிர்வாகத்திற்கான மாநிலங்கள் பாராட்டப்பட வேண்டும். தண்டிக்கப்படக்கூடாது என்ற அரசியலமைப்பை மீறுவதாகும். வெறும் எண்ணிக்கைக்கு மட்டுமான போராட்டம் அல்ல. இது நமது அடையாளம், கலாசாரம் மற்றும் பாரம்பரியத்திற்கான போராட்டம்தொகுதி மறுவரையறை நடவடிக்கை என்பது பார்லிமென்ட் தொகுதிகள் மட்டுமல்ல. இது இந்தியாவின் கூட்டாட்சிக்கான எதிர்காலம் பற்றியது. தற்போதுள்ள திட்டத்தை மத்திய அரசு பின்பற்றினால், அது கூட்டாட்சி சமநிலையை பாதிக்கும். மக்கள் தொகை வளர்ச்சியை கட்டுப்படுத்த தவறிய மாநிலங்களுக்கு அதிகாரத்தை வழங்கும். இது வடக்கிற்கும், தெற்கிற்குமான மோதல் அல்ல. எங்களுக்கு நியாயமான பிரதிநிதித்துவம் தேவை. மேலும், நமது நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்பை பாதுகாப்பதற்கான இந்த போராட்டத்தில் நாங்கள் ஒன்று பட்டு நிற்கிறோம்.

தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி

முன்னாள் பிரதமர் வாஜ்பாயை பின்பற்றி, தொகுதி மறுசீரமைப்பை அடுத்த 25 ஆண்டுகளுக்கு பிரதமர் மோடி நிறுத்தி வைக்க வேண்டும். மாநிலத்தை ஒரு அலகாக கொண்டு எல்லை நிர்ணயம் செய்யவேண்டும். இந்த வழியில் ஒவவொரு மாநிலத்திலும் தொகுதிகளுக்கான எல்லைகளை மாற்றலாம். தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கான இடங்களை அதிகரிக்கலாம். பெண்கள் இட ஒதுக்கீட்டை செயல்படுத்தலாம்.தேசிய வளர்ச்சி மற்றும் பொருளாதார வளர்ச்சியில் சிறந்த பங்களிப்பு அளித்ததற்காக தென் மாநிலங்களுக்கு வெகுமதி அளிக்க வேண்டும்

பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மன்

சென்னையில் நடந்த கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் தொகுதி மறுவரையறைக்கு எதிராக பஞ்சாப் தரப்பு நியாயம் முன் வைக்கப்பட்டது. அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக தொகுதி மறுவரையறை மூலம் லோக்சபாவில் எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களின் பங்கை குறைக்க பா.ஜ., முயற்சி செய்கிறது. பா.ஜ.,வின் இந்த அநீதியை நாங்கள் எதிர்க்கிறோம்.

முன்னாள் மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி


தொகுதி மறுவரையறை தொடர்பாக, தேவையற்ற பேச்சுகள் தேவையில்லை என்று நான் கருதுகிறேன். முதலில் மறுவரையறை குழு அமைக்க வேண்டும். முடிவெடுக்க வேண்டியது அக்குழுவின் வேலை. மறுவரையைறை குழு தொடர்பாக ஒரு குறிப்பு தேவைப்படும். அனைத்து கட்சிகளின் கருத்துகளை கேட்ட பிறகு, குழு குறித்து முடிவு செய்யப்படும்.தென் மாநிலங்களின் தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்படாது என மத்திய உள்துறை அமைச்சர் கூறியுள்ளார். இதனால், வட மாநிலங்களில் தொகுதிகள் அதிகரிக்கப்படாது என்பதற்கு உத்தரவாதம் இல்லை. இது பார்லிமென்டில் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை இழப்பதற்கு சமம்.இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பு மீது வெளிப்படையான தாக்குதல் நடத்தப்படுகிறது. மாநிலங்களுடன் கலந்து ஆலோசனை செய்யாமல், ஒரு தலைபட்சமாக தொகுதி மறுவரையறையை அமல்படுத்துவதன் மூலம் பா.ஜ., தலைமையிலான மத்திய அரசு, பார்லிமென்டின் பிரதிநிதித்துவத்தை சிதைத்து, தனது அரசியல் நலனுக்காக அதிகாரத்தை பலப்படுத்த முயற்சி செய்கிறது. மக்கள் தொகை பெருக்கத்தை பொறுப்புடன் செயல்படுத்திய மாநிலங்களை குறைத்து மதிப்பிடுவதற்கு உட்படுத்தும் ஒரு திட்டமிட்ட நடவடிக்கை. நமது ஜனநாயகத்தையும் அதன் கூட்டாட்சி கொள்கைகளையும் பாதுகாக்க நாம் ஒன்றாக நிற்க வேண்டும். கூட்டாட்சி என்பது மத்தியில் இருந்து கிடைத்த பரிசு அல்ல. அது நமது இறையாண்மை உரிமை.

சசிதரூர்


தொகுதி மறுவரையறை பிரச்னை குறித்து ஒருவருக்கு ஒருவர் அதிகம் பேச வேண்டி உள்ளது என நான் நினைக்கிறேன். அதற்கு தேவையான முக்கியமான விவாதங்கள் அதிகம் உள்ளன.






      Dinamalar
      Follow us